top of page

Angamaly Diaries - லிச்சி

  • Writer: Gowtham G A
    Gowtham G A
  • Feb 5, 2023
  • 3 min read

Updated: Mar 3

காட்சி 1

இடம் : சாலை

நேரம் : இரவு

ree

லிச்சி : ஒன்னு ரெண்டு மூணு…

பிலிப் : இப்ப எதுக்கு குழந்த மாதிரி பண்ணிட்டு இருக்கே…

(சாலையில் ஒரு ஷேர் ஆட்டோ கடக்கின்றது)

லிச்சி : நாலு அஞ்சு….

(கால் தடுக்கி விழ பிடித்துக்கொண்ட பிலிப்)

பிலிப் : அடக்கடவுளே…!!! இவள வச்சிக்கிட்டு…!!!!

ree

(தலையில் அடிக்காத குறையாக)

பிலிப் : முடியாட்டி எதுக்கு இவ்ளோ குடிச்ச ? எதாச்சும் ஆச்சா ?

(பிடித்துக்கொண்டிருந்த பிலிப்பின் கையிடமிருந்து தன் கையை விலக்கிவிட்டு குதித்து நடக்கத்துவங்குகிறாள். நீண்ட நேரம் அவர்களோடு சேர்த்து அமைதியும் பயணிக்கிறது. கொஞ்சம் இழுத்து விட்ட மூச்சோடு சிரித்துக்கொண்டே திரும்பி பிலிப்பை பார்க்கிறாள்)

பிலிப் : இப்ப எதுக்கு சிரிக்கிற லிச்சி ?

லிச்சி : ஒன்னுமில்ல.

பிலிப் : லிச்சி, சிரிக்கிறத நிறுத்திட்டு என்னன்னு சொல்லு. என்ன கலாய்க்காத.

லிச்சி : ம்ம்ம்ம்ம்ம்ம்… நான் எதாச்சும் கேட்டா உண்மையா பதில் சொல்லுவியா ?

பிலிப் : என்ன உண்மை ?

ree

(அகன்ற இருண்ட வீதியின் ஒரு புறம் லாரிகளும் இன்னொருபுறம் இன்னோவா காரும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சாலையின் முடிவில் அதன் வெளியில் 20 அடிக்கு ஒரு சிலுவையும், விளக்குகளால் சூழ்ந்த சர்ச்சுக்கும் முன்னால் அந்த சாலைகளில் அடுத்த தெருவினைக் கடக்கின்றனர்.)

லிச்சி : உண்மைய சொல்லுவியா மாட்டியா ?

பிலிப் : சரி. சொல்றேன்.

(இப்போது இருவரும் நெருங்கி நடக்கத்துவங்குகின்றனர்)

லிச்சி : நீ ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தியே சக்தி. எல்லாம் அவள கல்யாணம் பண்ணிக்கிட்டு அவ கூடவே ஜெர்மனில செட்டில் ஆகலாம்னு தானே

பிலிப் : முன்னாடி அப்படி நெனச்சேன். அப்புறம் ரொம்ப சீர்யஸா போக ஆரம்பிச்சிடுச்சு.

ree

(மடித்திருந்த சட்டயின் மடிப்பை உயர்த்திவிட்டு)

பிலிப் : இப்ப எதுக்கு அதெல்லாம் பேசிட்டு இருக்கே ? அந்த பேச்ச விடு.

லிச்சி : எப்படிப்பாத்தாலும் உன் கண்ணு ஜெர்மனி மேல தானே ?

பிலிப் : ஏய்ய்ய். அப்படில்லாம் ஒன்னுமில்ல.

லிச்சி : ம்ஹிம்…..

பிலிப் : என்னப்பத்தி எல்லாம் தெரிஞ்சதுக்கப்புறமும் யாராச்சும் ஓக்கேன்னு சொன்னா சைனா, ரஷ்யா, ஜப்பான் எந்த கிரகம்னாலும் எனக்கு ஓக்கே தான்.

லிச்சி : அதுக்கில்லீங்க சார்.

(இடுப்பில் இரு கைகளையும் வைத்தவாறு)

ree

லிச்சி : துபாய் மாதிரி சின்ன நாடுல்லாம் சாருக்கு ஓக்கேவா ?

பிலிப் : துபாயா ?

லிச்சி : ஆமா…

பிலிப் : யோசிக்கிறேன்.

(அவர்கள் பின்னால் வரும் அட்டோவிலிருந்து)

ஒரு குரல் : இந்த சனியன் கூட எங்கடி போற ? போய் சாவு.

ree

பிலிப் : மூடிட்டு போடா… (ஆட்டோவை நோக்கி)

(ஆத்திரத்தில் பிலிப்)

பிலிப் : சாவுகிராக்கிங்க…

(மெல்ல விலகி நடக்கத்துவங்குகின்றனர்)

லிச்சி : ஒரு நல்ல பொண்ணு இருக்கு. நான் வேணா உனக்கு பேசி பாக்கட்டா ?

பிலிப் : சீரியஸா சொல்றியா லிச்சி ?

(லிச்சி கொஞ்சம் முன்னேறி சென்றுவிட்டு)

லிச்சி : ஆமா மாப்ள…

(பிலிப் வேட்டியை மடித்துக்கொண்டே)

ree

பிலிப் : யார் அந்த பொண்ணு ? யாராச்சும் உன்கூட வேலை பாக்குற பொண்ணா ?

லிச்சி : எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு தான்.

பிலிப் : ம்ஹும்ம்ம்ம்…

(மெல்லிய சிரிப்பில்)

பிலிப் : சக்தி போனதுக்கப்புறம் அது மாதிரியான எந்த யோசனயும் இல்ல.

(கீழே எதோ விழுந்ததை பார்த்துவிட்டு மீண்டும் நடக்கத்துவங்குகிறார் லிச்சி)

பிலிப் : இப்ப எல்லாம் நல்லபடியாத்தான் போய்க்கிட்டிருக்கு. நாளைக்கு என்ன நடக்கும்னு தான் எனக்கு தெரியல. எவ்ளோ சிக்கிரம் கேஸ்ல இருந்து வெளில வரனோ அவ்ளோ சீக்கிரம் இங்கிருந்து எங்கயாச்சும் போயிடனும்.

(பின்னால் ஒரு கார் கடந்து செல்கிறது)

பிலிப்: இதுக்கு மேலயும் இங்கயே இருந்தா அது சரியா இருக்காது.

(காருக்கு நேரெதிர் திசையில் ஒரு டிவிஎஸ் செல்கிறது)

பிலிப்: அதனால தான் என்னப்பத்தி எல்லாம் தெரிஞ்சதுக்கப்புறமும் யாராச்சும் என்மேல விருப்பப்பட்டா…… பாத்துக்கலாம்…

(நேராக சென்று கொண்டிருந்தவள் அவன் பக்கமாக திரும்பி)

ree

லிச்சி : அப்போ உனக்கு கல்யாணம் பண்ணிக்கிறதுல எந்த பிரச்சனையும் இல்ல. சரியா ?

(பிலிப்பை பார்த்தவாரே கையை உயர்த்தி கேட்டுவிட்டு கைகளை கீழிறக்கி சிரித்துக்கோண்டே முன்னேறி நடக்கத்துவங்குகிறாள் லிச்சி)

பிலிப் : நேரமென்ன ?

(இருவரும் வாட்சை பார்க்கின்றனர்.)

பிலிப் : ஹே ?

லிச்சி : 2:30

பிலிப் : இங்க வா லிச்சி. காலைல சீக்கிரமா போகணும். வேகமா நட.


காட்சி 2 இடம் : லிச்சி வீடு நேரம் : இரவு

ree

(பிலிப் வீட்டின் கதவுகளை திறக்கிறான். உள்ளே நுழையும் லிச்சியிடம்)

பிலிப் : அந்த பொண்ணோட போட்டோ எதாச்சும் போன்ல இருக்கா ?

லிச்சி : அவசரப்படாத. நானே காட்டுறேன்.

(சிரித்தவாறு செல்கிறாள்)

பிலிப் : லிச்சி, மேல மாடில போய் தூங்கு. மெர்சி அங்க தான் இருப்பா.

லிச்சி: ஆஹ்ன்…

பிலிப்: சரி. கதவ சாத்திக்க. நான் கிளம்புறேன்.

( பிலிப் கதவை மூடிக்கொண்டிருக்கையில்)

லிச்சி: அடேய். லைட்டோட ஸ்விட்சு எங்கன்னு தெர்லயே.

(கதவை திறந்து இருண்ட பகுதிக்கு லிச்சி செல்கிறான்)

பிலிப்: இரு நான் பாக்கறேன்.

ree

(அவன் தேடிக்கொண்டிருப்பதை மெல்லிய புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்த லிச்சி அவளை நொக்கி திரும்புகையில் கட்டிப்பிடித்துக்கொள்கிறாள். இருவரும் பேசாமலிருக்கையில் திடீரென்று வெளிச்சம் வர இருவரும் விலகிக்கொள்கின்றனர்)

ree

தங்கை : யாரது ?

லிச்சி : நான் தான்.

தங்கை : இந்த நேரத்துல இங்க என்ன பண்ற ?

ree

(பிலிப் ஒரு வித பதட்டத்துடன்...)

பிலிப் : இல்ல. ஸ்விட்ச தேடிட்டிருந்தேன்.

ree

தங்கை : மணி ரெண்டாச்சு.

(அவனின் பதட்டத்தை ரசித்தவாறே லிச்சி)

ree

(லிச்சியை நோக்கி)

தங்கை : வா லிச்சி. போய் தூங்குவோம்.

(கிளம்பிய பிலிப்பிடம்)

தங்கை: சேட்டா, காலைல மல்லிகப்பூவ மறந்துடாத…

பிலிப் : ஹான்…

(வெளியில் போய்க்கொண்டிருக்கும் பிலிப்பிடம் கதவுக்கு அருகில் வந்து)

லிச்சி : தே…

(சடாலென லிச்சியை நோக்கி திரும்புகிறான் பிலிப் )

ree

(குறைந்த ஒலியில்)

பிலிப் : ஹான்…

(கம்பிகளுக்கு இடையிலான மஞ்சள் வெளிச்சத்தில்)

லிச்சி : இப்ப புரிஞ்சுதா, யார் அந்த பொண்ணுன்னு ?

ree

(மெல்லிய குரலில் தலையை ஆட்டிக்கொண்டே)

பிலிப் : ஹான்…

(புன்னைகையுடன் சிமிட்டிய விழிகளுடன் லிச்சி)

லிச்சி : நல்லா யோசிச்சிட்டு சொல்லு.

(ஆச்சர்யம் சூழ்ந்த முகத்துடன் சிரித்தபடியே நிற்கிறான் பிலிப்)

ree

லிச்சி : இளிச்சது போதும். போய் தூங்கு.

ree

சிரித்துக்கொண்டே கீழே பார்த்துவிட்டு மீண்டும் அவளை பார்த்தவாறு கடந்து செல்கிறான். கம்பிகளின் இடையில் உற்சாகம் பொங்கிய மகிழ்ச்சியுடன் லிச்சி அவனை பார்த்துக்கொண்டிருக்கையில் பாடல் துவங்குகிறது)

ree

Comments


bottom of page