top of page

பஞ்சாங்கமாகும் விக்கிபீடியா தமிழ்

  • Writer: Gowtham G A
    Gowtham G A
  • Apr 9, 2024
  • 2 min read
ree

மொழி திரைப்படத்தில் வரும் ஞானபிரகாசம் (எம்.எஸ். பாஸ்கர்) என்ற கதாப்பாத்திரம் உங்களுக்கு நினைவிருக்கலாம். 1984 இல் தன் மகன் இறந்து போன அதிர்ச்சியில் அவர் சிந்தனை 1984 உடன் நின்றுவிடும். சமகாலத்தில் நிகழும் எந்த மாற்றமும் அவருக்குத்தெரியாது. உலகமே 2006 இல் இருக்க, அவர் மட்டும் 1984 இல் வாழ்ந்து கொண்டிருப்பார். கிட்டத்தட்ட அவருக்கே டஃப் கொடுக்கும் விதமாக, தமிழ் விக்கிபீடியாவில் AntanO என்று ஒரு ஜீவன் உலாவிக்கொண்டிருக்கிறது.


தொழில்நுட்பம், சினிமா, இலக்கியம், மற்றும் ஏனைய படைப்புகள் சார்ந்து நிறைய அதிநுட்பமான தமிழ்க் கட்டுரைகள் அங்கு இல்லாம போனதுக்கு காரணம் அந்த குறை பிரசவத்தில் பிறந்த அந்த விந்துவும், அவர்கள் வைத்திருக்கும் ஒரு ஐந்தறிவுக்கூட்டமும் தான். இன்னமும் பழைய பஞ்சாங்கத்தை பிடித்துக்கொண்டு தானும் முன்னேற மாட்டேன் அடுத்தவனையும் முன்னேற விடமாட்டேன் என கங்கனம் கட்டிகொண்டு திரிகிறது.


நிறைய விக்கிப்பீடியா பக்களின் தமிழ் பதிப்புகள் சரியாக இல்லை. அல்லது ஏனே தானோ என்று கடமைப்பு ஒரு பக்கத்தை வைத்திருப்பார்கள். நிறைய பதிவுகளில் உசாத்துகள் கூட இருக்காது. ஆனால் அதை நாம் திருத்தி புதிய தகவல்களை சேர்த்தால் உசாத்துகள் பத்தவில்லை, தேவையில்லாத பதிவு என தூக்கிவிடுவார்கள். இது தேவை, தேவையில்லை என்பதை முடிவு செய்ய இவர்கள் யார்?


அவர்கள் வைக்கும் வாதம் எல்லாம் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதுடன் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும். “நான் சொல்வதைக்கேள். இல்லையென்றால் உன் கணக்கை நீக்கி விடுவேன்” இது தான் விக்கிபீடியா போன்ற பொதுவான ஒரு களத்தில் கட்டுரை சமர்ப்பிப்பவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் அதிகபட்ச மரியாதை.

வேறு வேறு பெயரில் கணக்கை துவங்கி கட்டுரைகளை பதிப்பித்தாலும் மண்டை மேலிருக்கும் கொண்டையை மோப்பம் பிடித்து கட்டுரையை தூக்கி விடுவார்கள்.


இப்படியான எனது நிறைய சினிமா சார்ந்த தமிழ் கட்டுரைகளை நீக்கிவிட்டார்கள் மிஞ்சிய டைனோசர் முட்டைகளைப்போல இன்னமும் மிச்சமிருப்பது கமல் நடித்த உத்தமவில்லன், ஹேராம், ஹிட்ச்காக்கின் சைக்கோ, ஸ்டான்லி குப்ரிக், ஷைனிங் திரைப்படம் போன்ற சில கட்டுரைகள் தான்.


தலைமை ஏற்பவனுக்கு இருக்க வேண்டிய அடிப்படையான பண்பு, சொல்ல வருவபவனுக்கு செவி கொடுத்து கேட்பது. அவன் சொல்வதிலிருக்கும் நியாயத்தை ஏற்றுக்கொள்வது. இல்லை. நான் இங்கே ஒரு விதியை வைத்திருக்கிறேன் அதன்படி தான் நீங்கள் எல்லோரும் எழுத வேண்டும் என நிர்பந்தித்தால் அதன் பெயர் சர்வாதிகாரம். அதற்கு அவர்கள் சொந்தமாக ஒரு இணையதளத்தை உருவாக்கி என்னமோ செய்து தொலையட்டும். பொது மக்கள் புழங்கும் விக்கிபீடியா போன்ற தளத்தை இப்படி ஒரு கூட்டம் சூழ்ந்து கொண்டிருப்பது தமிழ் இலக்கிய சூழலுக்கு மட்டுமல்ல தமிழ்ச்சூழலுக்கே ஆபத்தானது.


ஸ்டான்லி குப்ரிக் என்ற ஒரு இயக்குனரை உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆசை ஆசையாக அவரது பக்கத்தை தமிழில் மொழி பெயர்த்தேன். அதில் முதலில் விழுந்த அடி அவர் பெயரை ’இசுடான்லி குப்ரிக்கு’ என்று மாற்றியது. இப்படித்தான் இருக்க வேண்டுமாம். இப்படியெல்லாம் எந்த கிறுக்கனும் எழுதவோ படிக்கவோ அழைக்கவோ மாட்டான் என்று சொன்னால் கணக்கை நீக்கி விடுவார்கள் அல்லது தற்காலிகமாக முடக்கி விடுவார்கள். இவர்களுக்கு தெரிந்தது இவ்வளவு தான்.


நான் மேல் குறிப்பிட்ட எம்.எஸ். பாஸ்கர் பெயரையே “எம். எசு. பாசுகர்” என்று விக்கிபீடியா தமிழில் மாற்றி விட்டார்கள். (இது எம்.எஸ். பாஸ்கருக்கு தெரியமால் பார்த்துக்கொள்ளுங்கள்)


பேருந்தில் முதலில் அமர்ந்த சிறுவன் இது என் சீட்டு என்று சொல்லிக்கொள்ளும் சிறுபிள்ளைத்தனத்துடன் 2005 இல் இருந்து விக்கிபீடியாவில் பங்கேற்றுக்கொண்டிருப்பதால் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்று நினைப்பவர்களை கூடிய சீக்கிரம் நல்ல மனநல மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இவர்கள் தான் என்னமோ விக்கிபீடியாவுக்கே முதலாளிகள் மாதிரி சர்வாதிகாரம் செய்வதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை.


அப்படி என்ன தான் தமிழுக்கான அர்ப்பணிப்புகளை செய்திருக்கிறார் என்று பார்த்தால், நிறைய பக்கங்கள் அவரிடம் இருக்கிறது. மகிழ்ச்சி. ஆனால் எல்லாம் அவர்கள் படிக்கும் தமிழில் உள்ளது. அவர்கள் ஆட்களுக்கான கட்டுரைகளாக உள்ளது. பொது மக்கள் படிக்கும் பொதுத்தமிழில் அல்ல. இதுவும் கிட்டத்தட்ட ஒரு வித பார்ப்பாணிய மனநிலை தான்.


மற்ற கட்டுரைகள் தாண்டி அந்த AntanO பக்கத்தில் போய் பார்த்தால் அதில் சேகுவேராவின் அருமையான ஒரு வசனம் இருந்தது. பாவம் அதை அவர் தான் படித்ததில்லை போல.


”உலகின் எங்கோ நடக்கும் முறையின்மைக்காக உன் மனம் கொதித்தால், நீயும் எனக்குத் தோழன் தான்

Comments


bottom of page