top of page

தூணிலும் துரும்பிலும்

  • Writer: Gowtham G A
    Gowtham G A
  • Jun 24, 2023
  • 1 min read

ree

தன் காதலன் எழுதிய

கவிதை புத்தகங்கள் அத்தனையும்

தேடித்தேடி எடுத்த

பெண்ணின் கண்களில்

மின்னிய புன்னகையில்

கண்டேன் உன் முகம் .


என் கிறுக்கல்களை

படிக்கும் உன் கண்களில்

மின்னும் புன்னகையில்

நான் தெரிவேன்

அது போல.


அவள் அணிந்திருந்த

உன்னை அணியச்சொன்ன

அதே கறுப்பு நிற வட்டக் கண்ணாடி


உனைப்போலவே

அவள் உடுத்திய

நேர்த்தியான ஆடை

அதில் தெரிந்த மடிப்புகள்


உனைப்போலவே

அவள் கரங்களை அலங்கரித்த

அழகிய வேலைப்பாடுகள் கொண்ட

வளையல்கள்


உனைப்போலவே

அதிக நகைகளின் பாரம் சுமக்காத

ஒற்றை நகையில் நிறையும்

அவள் கழுத்து


உனைப்போலவே

வான்கோவை சிறைபிடித்த

அவள் அலைபேசியின் முதுகு


இப்படியாக கலைநயமிக்க

ஒவ்வொரு பெண்ணிலும்

உன்னையே தேடுகிறது

என் மனம்...


ஜி.ஏ. கௌதம்

01.04.2023

Comments


bottom of page