வேதாளம்
- Gowtham G A
- Apr 21, 2023
- 1 min read

வாழ்க்கை
நாம் நினைப்பதைப்போல
அத்தனை குரூரமானதில்லை
அத்தனை எளிதில்
அந்தரத்தில் முடிந்துவிடுவதுமில்லை
எத்தனையோ முறை
எத்தனையோ சமயத்தில்
எத்தனையோ விதத்தில்
கை தூக்கி விடும் உறவுகளை
கை காட்டிக்கொண்டே தான்
இருக்கிறது.
ஒரு குழந்தையின்
புன்சிரிப்பைப் போல
ஒரு நாய்க்குட்டியின்
ஸ்பரிசத்தைப் போல
ஒரு தோழமையின்
அணைப்பைப் போல
அப்படியேனும்
ஒரு கரம் கிடைப்பின்
கெட்டியாக பிடித்துக்கொண்டு
மேலேறி விடுவதில்
உயிர் தப்பிய நிம்மதி
இன்னமும்...
நினைவுகள் எனும் வேதாளம்
தோளில் கனக்கத்தான் செய்கிறது
அத்தனை எளிதில்
இறங்கி விடுவதுமில்லை
இறக்க விடுவதுமில்லை.
- ஜி. ஏ. கௌதம்
12.04.2023



Comments