top of page

பேசா மொழி

  • Writer: Gowtham G A
    Gowtham G A
  • Apr 26, 2023
  • 1 min read


ree

இதயங்களை இணைத்து,

அன்பளிப்பாய் கரம் மாறி,

அன்பின் சாட்சியாய் உடனிருந்து,

காதலிக்க கற்றுக்கொடுத்து,

ஊடல்களில் உடனிருந்து,

கூடல்களில் உடனிருந்து,

பிரிவில் உடனிருந்து,

குறைகளை சுட்டிக் காட்டி,

இட்ட கையெழுத்துடன் திரும்பி வந்து,

தனிமையை நிரப்பி,

நினைவுகளை கிளறி,

எமன் கயிற்றை எட்டித்தள்ளி,...


இத்தனைக்கு பிறகும்

என் கரங்களை

இறுகப்பற்றி தவழ்கிறது

இன்னொரு உலகின்

வாசல் கதவை ஏந்திய

ஒரு புத்தகம்...

Happy World Book Day


ஜி.ஏ. கௌதம்

23.04.2023

Comments


bottom of page