மசகு
- Gowtham G A
- Aug 13, 2023
- 1 min read
Updated: Aug 13, 2023

அதி தீவிரமாக
காதலித்த ஒருத்தியை
மறக்க வேண்டுமெனில்
முதலில் நீங்கள்
செய்யவேண்டியவை...
அவளின் முகநூல் வாசலை
பூட்டிடும் வேலை.
அது உங்களுக்கு இல்லை
அதை அவர்களே
பார்த்துக்கொள்வார்கள்.
அதனால்,
மீண்டும் மீண்டும் நினைவூட்டும்
அவளின் புகைப்படங்களை,
பேசிக்கொண்ட சேட்(டை)களை,
உங்கள் அலைபேசியிலிருந்து
அழித்து விடுங்கள்.
(பி.கு: நகலெடுக்காமல்)
ஆள்காட்டி விரல் நீட்டி
என்னிடம் கேட்டால்
வெட்கமின்றி ஆம் என்றே
பொய்யுரைப்பேன்.
முதலில் உங்களை
சோதித்துப் பார்க்கிறேன்
உங்களால் முடியுமெனில்
முயன்று பார்ப்பேன்.
ஆனாலும்,
அழிப்பதாயில்லை.
காதல்,
சுயநலன சக்கரத்தின்
கழுத்து இடுக்கில்
ஒட்டிக்கொண்ட மசகு.
ஜி.ஏ. கௌதம்
22.05.2023



Comments