மீண்டும்
- Gowtham G A
- Jun 24, 2023
- 1 min read
Updated: Jul 10, 2023

நீ நம் இருப்பை நம்புகிறாய்
நான் போராட்டத்தை நம்புகிறேன்
நீ கவனிப்பை நம்புகிறாய்
நான் புறக்கணிப்பை நம்புகிறேன்
ஒரு நாளின் ஒவ்வொரு அணுவிலும்
நாம் ஒன்று போலவே இருக்கிறோம்
நமக்கு நாமே
ஏற்படுத்திக்கொண்ட வலியுறுத்தலில்
நாம் மீண்டும் மீண்டும்
இடம் மாறிக் கொண்டிருக்கிறோம்
நம்மை...
- ஜி.ஏ. கௌதம்
24-06-2023



Comments