top of page

அபராதத்தில் ஓடும் காதல்

  • Writer: Gowtham G A
    Gowtham G A
  • Apr 2, 2023
  • 1 min read



என்ன மேடம், ஹாஸ்டல்க்கு போயிட்டீங்களா ?


வந்துட்டேன் தங்கம். இப்ப தான் முகம் கழுவிட்டு வந்து உக்காந்தேன்.


சரி... அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்


சொல்லுங்க


அது வந்து..!!!


அத நான் எப்படி சொல்றது...!


எதுவும் சொல்ல வேணாம் பா.


அப்படியா அப்போ சரி...


ஏய். ஏய். சொல்லு சொல்லு சொல்லு..


என்ன ? சொல்லு ஆ !!!


சரி. சொல்லுங்ங்ங்ங்ங்ங்ங்க.


சொல்ல வேணாம்னு சொன்ன ?


இல்ல பரவால. சொல்லுங்க...


சரி. கனிமொழி நிகழ்வுக்கு டிரஸ் எடுக்க நாளைக்கு ஷாப்பிங் போறேன்னு சொன்னியே,

பில் போடும் போது கூகிள்பே வேலை செய்யலைன்னா எப்படி பில் கட்டுவ...


என் பர்ஸ்ல எப்பவும் பணம் இருக்குமே.


அது் பத்தலைன்னா ?


கூட இருக்குறவங்க கிட்ட கொடுக்க சொல்லிட்டு, அப்புறமா அவங்களுக்கு கூகிள்பே பண்ணிருவேன்.


அப்பவும் கூகிள்பே வேலை செய்யலைன்னா ?


போன்பே பண்ணிருவேன்.


அதுவும் வேலை செய்யலைன்னா ?


எ.டி.எம் ல போய் பணம் எடுத்து கொடுத்துருவேன்.


சரி. ஏ.டி.எம் கார்டு எங்க இருக்கு ?


ஐயோ கௌதம்ம்ம்ம்...!!!! இப்ப தான் நியாபகம் வருது.


மனச மட்டும் விட்டுட்டு போயிட்டன்னு நெனச்சேன். என் வறுமை அறிந்து ஏ.டி.எம் கார்டு வச்சிட்டு போயிருக்குற அந்த மனசு தான் சார் கடவுள்...


தம்பி தம்பி சங்கமே அபராதத்துல தான் ஓடிட்டு இருக்கு.


அப்படியே அந்த ஏடிஎம் பின் நம்பரு...!!!


அடிங்க....!!! ஓடிருங்க...


என்னடி உன் உசுரே எனக்குதான்னு வசனம் எல்லாம் பேசுன...


உசுரக்கூட எடுத்துக்கங்க. ஆனா ஏ.டி.எம் கார்டை ஒழுங்கா எடுத்து வைங்க. உங்களால காலேஜ்க்கு லீவா போட்டு இப்ப காண்டோவுக்கு காசு கட்டணும். வீட்டுக்கு வேற மெசேஜ் போகும். மாட்டிக்கப்போறேன்.


தான் வசமாக சிக்கிக்கொண்டதாக உணர்கிறார் பதிவர்...


20.09.2022

இரவு 9 மணி

Comments


bottom of page