அதுவரை... (விகடன்)
- Gowtham G A
- Apr 20, 2023
- 1 min read
Updated: Apr 17, 2024


காலம் என்னை
மெதுவாக உள்ளிழுக்கிறது
பேரலையைப் போல
பிடிமானங்கள் ஏதுமில்லை.
சரணடைகிறேன்
கடலிடம்
எனைச் சுழற்றியடிக்கும்
அலைகளுக்கு மத்தியில்
மூழ்கிவிடத் தூண்டும்
மனதுடன் பரிசலிட்டு
நான் மீண்டு வருவேன்
கரையிடம்
துடிக்கும் உன் கரங்களை
இறுகப் பிடித்துக்கொண்டு
இதுவரை நாம் ஆடிய
ஆட்டத்தின் காய்களை
நகர்த்தாமல் இரு
அதுவரை...
- ஜி.ஏ கௌதம்
04.04.2023



Comments