அப்பன் சாபம்
- Gowtham G A
- Feb 24, 2023
- 1 min read

Daenerys மட்டும் சவாரி செய்த டிராகனை Jon Snow சவாரி செய்கிறான். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பறக்கிறார்கள். முதன்முதலாக டிராகனில் பயணிக்கும் ஜான் ஸ்நோ பயத்தில் வெளிறி போகிறான். இதுவரை கண்டிராத ஒரு இடத்தில் இறங்குகிறார்கள். அங்கே ஒரு அழகான நீரோடையை பார்க்கிறாள் டெனீரியஸ்.
டெனீரியஸ் : இப்படி ஒரு இடத்தில் ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும். யாராலும் நம்மை கண்டுபிடிக்க முடியாது.
ஜான் : ஒரு வேளை வயதான பிறகு....
(கன்னங்களின் இரு புற தசைகளும் உயர அவள் மெல்ல சிரிக்கிறாள். அவளருகே வரும் ஜான்)
ஜான் : தெற்கிலிருந்து வருபவளுக்கு இது கொஞ்சம் அதீத குளிர் தான்.
டெனீரியஸ் : அதனால் என்ன, உன் ராணியை கதகதப்புடன் வைத்துக்கொள்...
என விழும் அருவிச்சத்தங்களின் பிண்ணனி ஓசையில் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். க்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற ஒலிச்சத்தம் கேட்க இருவரும் திரும்பிப் பார்க்க்கிறார்கள். இரண்டு டிராகன்களும் உர்ர்ர் என்று முறைத்தபடி இவர்களை பார்த்துக் கொண்டிருந்தன.
டெனீரியஸ் : பயப்படாதே
என்றவாறு இறுக்கிய அணைப்பில் குளிரின் கதகதப்பில் முத்தங்களை தொடர்கிறாள். அவளை முத்தமிட்டவாறு மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்க்கையில் அவனை அழைத்துச்சென்ற டிராகன் அவனை முறைத்தவாறு பார்த்துக் கொண்டிருந்தது.
அந்த டிராகனுக்கு அவள் இட்ட பெயர் ரீகர்.
ஜான் ஸ்நோவின் உண்மையான அப்பாவின் பெயரும் ரீகர்.


Comments