இன்று நேற்று நாளை
- Gowtham G A
- Mar 24, 2023
- 1 min read
Updated: Mar 24, 2023
கால இயந்திரம்
ஒன்று கிடைத்தால்,
கடந்த காலம் திருத்தி எழுத
அதில் இரண்டு வாய்ப்புகள் இருந்தால்,
நான் வர மறுத்த
ஒரு அழைப்பையும்,
அவள் என்னை
வெறுத்த முதல் நிகழ்வையும்,
மாற்றி எழுதியிருப்பேன்
வேறு எந்த
பெரிய ஆசையுமில்லை
இவை இரண்டும் போதும்
என் ஆயுள் தீர
வாழ்ந்து விடுவேன்...
- G.A. கௌதம்
20.03.2023



Comments