சிவப்பு
- Gowtham G A
- Mar 17, 2023
- 1 min read
Updated: Mar 27, 2023

உன் அருகில் தான் நிற்கிறேன்
உனக்காகத்தான் இத்தனை
கிறுக்குத்தனங்களை செய்கிறேன்
உனை கை காட்டியே
அத்தனையும் சொல்கிறேன்
ஆனால்...
உனை நோக்கும்
என் விரல் நுனி
யார் கண்களுக்கும் தெரிவதில்லை
உன் அருகில் இருந்து கொண்டே
உனைப்பற்றியே பேசுகிறேன்
உன்னுடனிருக்கும் யாருக்கும்
அது புரியப்போவதும் இல்லை
அதை விரும்புவதும் இல்லை
காதில் விழாதவாறு
முகம் திருப்பி நிற்கும் நீ
இப்போது சிரித்தாலும்
நீ அபகரித்த என் நாட்கள்
மீண்டு விடப்போவதில்லை
உண்மை ஒரு பச்சிளம் குழந்தை
நீண்ட நாள் தங்காது இருளில்
எனக்குப்பிடித்த சிவப்பு நிறம்
அது காட்டும் உன்னை
உலகுக்கு...
- G.A. கௌதம்
15.03.23



Comments