top of page

நினைவுகளின் ஈரம்

  • Writer: Gowtham G A
    Gowtham G A
  • Mar 21, 2023
  • 1 min read

Updated: Mar 27, 2023


ree

உன் நினைவுகளின் ஈரம்

மாமழை எனக்கு.


உன் கண்கள் பார்த்து

கரம் சேர்க்கும் அந்நொடியில்

காற்றெல்லாம்

காகிதப் பூக்களின் கைவண்ணம்

என் வெட்கம்.


நான் வாழ்ந்த என் அறையை

அந்நியமாக்கிய அலர் நீ.


என் இல்லத்தின்

சுவர்கள் சொல்லும்

நாம் சாய்ந்து கதையாடிய

கிறுக்கல்களை.


இரு உடல் நிகழ்த்தும்

வானவேடிக்கைகள்

பீத்தோவன் இசைவெடிப்பின்

எதிர்வினைகள்.


நீயும் நானும் பேசிக்கொண்ட

குறுஞ்செய்தி அரட்டைகள்

தஸ்தோவ்ஸ்கி வெளியிட

நா.முத்துக்குமார் பெற்றுக்கொண்ட

கவிதைபுத்தகத்தின் முன்னுரை.


நீ அணிந்த

என் சட்டைகளின் மை

உன் தேகத்தை துளைத்து

எலும்பு மஞ்ஞைகளின் நிறமாகிவிட்டன.


உன் கன்னக்கதுப்புகள்

ஹஸ்கி குரலில்

என் பெயர் பாட

இதழ்களின் நிறம்

சிவப்பானது.


உலகத்தின்

அத்தனை கதைகளையும்

பேசி தீர்க்க

இந்த ஒரு வாழ்வு

எங்ஙனம் நிறையும்?


- G.A Gowtham & She

5.10.2022


Comments


bottom of page