வான்கோவும் நாமும்
- Gowtham G A
- Mar 30, 2023
- 1 min read
Updated: Mar 31, 2023

நாம் சந்திக்க
காரணங்கள் தேவைப்படுவதில்லை
இருந்தாலும் தேடிக்கண்டுபிடிப்போம்
ஏதோ ஒன்றை...
முதலில் உனக்கும்
உன்னால் எனக்கும் பிடித்த
’வான்கோ’ பிறந்த இந்த நாளில்
நமக்குள் நாம் கலந்த
அதே அறையில்
தூரிகைகளுடன் காத்திருக்கிறோம்
நானும் வான்கோவும்
கொண்டாட
நீ தான் இங்கில்லை...
- ஜி. ஏ. கௌதம்
30.03.2023



Comments